பிறர்க்கு உதவுவோம்

நாங்கள் ஏன் பிறந்தோம்
என்று எண்ண வைத்திடாதீர்கள்............
இந்த இழிவான வாழ்க்கை நிலை
வேறு யாருக்கும் வர கூடாது....
அவர்கள் பருக நீர் தானே கேட்டார்கள்
கண்ணீரே வாழ்க்கையாகிவிட்டதே.......
உண்ண உணவு இன்றி
உடுத்த உடை இன்றி
இருக்க இடமின்றி வாழ்கிறார்களே ....
குப்பைத்தொட்டியில் இருக்கும் இட்லியே உணவாயிற்று.....
பழைய கந்தல் ஆடையே உடையாயிற்று......
சாலையோர பயணங்களில் பலரின் வாழ்க்கை
அவர்களின் இருப்பிடத்திலிருந்து தான் தொடங்குகிறது......
வாழ்க்கை என்றால் இது தானோ.....
உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி தான் பிறக்கிறோம்
அப்புறம் எப்படி இந்த பிரிவு நிலைகள்.....
ஆதரிக்க ஆளின்றி அனாதையாக வாழ்கிறார்களே .....
இருக்கும் பலர் இல்லாதவர்களிடம் பறித்து பறித்து
பயனடைவது இங்கு மட்டுமே......
மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே பொருட்ச்செல்வம் குவியும்
இது இன்னும் எத்தனை காலம் தொடருமோ...
இப்படியே போனால்
நினைத்து பார்க்கவே முடியவில்லை........

****************************************************************************************

நம்மால் முடிந்த வரை பிறர்க்கு உதவுவோம்....

எழுதியவர் : நவீன்குமார் கு (18-May-15, 12:17 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே