ஆப்பிளின் ஏவாள்

வீட்டில் அனைவரும்
தூங்கிக் கிடக்க
பின்னிரவு இருண்மைக்குள்
தூக்கம் வராத
முதிர்கன்னி,
என்ன செய்வதென்றே தெரியாமல்
ஆடை களைந்து
நிர்வாணமாக
கொல்லைப் பக்கம் சென்று
முழங்காலிட்டு
அமர்ந்தாள்....
கண்டும் காணாமல்
கடந்து சென்றது
நீண்ட நாட்களாக
வீட்டைச் சுற்றிக்
கொண்டிருந்த
பாம்பு.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (18-May-15, 12:08 pm)
பார்வை : 82

மேலே