நிரந்தரம்

அந்த அரசு அலுவலகத்தில்
ஒரு உத்தரவில் அவன்..
கையெழுத்துப் போட்டவுடன்
வந்தவர் நீட்டினார் ..
ஐநூறு ரூபாய் தாள் ஒன்று..!
..
புன்னகையுடன் மறுத்தான்..
இது நான் சில புத்தகங்கள் வாங்கும்
விலை ..என்றான்..
..
அடுத்து
ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு..
இது எனக்கு ..
சில நாட்கள் உணவின் விலை..என்றான்..
..

பின் எவ்வளவு ..
என்று இழுத்தார் வந்தவர்..
சிரித்தான்..
இந்த அரசாங்கம் எனக்கு ..
என் பணிக்காலம் முழுவதும் தரும்..
ஊதியம் தர முடியுமா..என்றான்..
..
வந்தவர் விழிக்க..
வேண்டாம் ஐயா..
என் கடமைக்கு ஊதியம் ..
ஏற்கனவே நான் பெறுகிறேன்..
அதுவே நிரந்தரம்..என்றான் ..
வந்தவருக்கு வந்தது
லேசாக ஒரு மயக்கம்!

எழுதியவர் : கருணா (19-May-15, 12:43 pm)
Tanglish : nirantharam
பார்வை : 581

மேலே