களை எடுப்போம்

பொன் கொடுத்தபசுந் தீவில்
பூவாகப் பிறந்தவளே -உன்னை
வன்கொடுமை செய்ய
வஞ்சகர்கள் வந்ததென்ன?
வெள்ளை நிறப் பூவாய்
பள்ளி சென்று திரும்புகையில்
கிள்ளி உனைப் பிய்த்தெறிய
கிராதகர்கள் நினைத்ததென்ன?
வெள்ளி முழைக்கும்
விடிகாலைப் பொழுதொன்றில்
கொள்ளி வைக்க ஆளின்றி
கொத்தாகச் சரிந்த இனச்
சொல்லவொண்ணாச்
சோகமதை சுமந்துதிர்த்த
கண்ணீரின் நில்லாத
பேராறின் நெடுந்துயரம்
காய்ந்திடமுன்
அல்லாத அரக்கர்கள்
எம் இனத்துள் ஏன் முழைத்தார்??
கொல்லாமல் விடமாட்டோம்...
இக் கோடாரிக் காம்புகளை.
இல்லாமல் போனாலும்
போகும் ஈழத்தில் எம்மினம்
இவர் செயலால்..
இதனால்.... இவர்கள் இனி
இங்கிருக்கக் கூடாது.
எனவே ஈழத்து உறவுகளே
எல்லோரும் வாருங்கள்
எடுங்கள் ஆளுக்கொரு அரிவாள்
ஈனர்களைக் களையெடுப்போம்.

எழுதியவர் : சிவநாதன் (20-May-15, 1:26 am)
பார்வை : 84

மேலே