ஜிம்மியும் நானும்

ஜிம்மியும் நானும்
--------------------------

எதிர் வீட்டு நாயின் பெயர் ஜிம்மி.
என்னைக் காணும்போதெல்லாம் கண்களை உயர்த்தி
காதுகளை நிமிர்த்தி வாலை ஆட்டிக்கொள்ளும்.

முற்றத்தில் நான் விதைக்காமல்
முளைத்திருந்த புல் பூண்டுகளை அகற்றுவதற்காக
வெளியில் வந்தேன்

கண்களில் சோர்வு, கால்களில் தளர்ச்சி
காதுகள் தொங்கிய நிலையில் என்னை நோக்கி
வந்தது ஜிம்மி.

‘என்ன ஜிம்மி, உடல்நிலை சரியில்லையா?’ என்றேன்
‘இல்லையில்லை, மனநிலைதான் சரியில்லை’ என்றது ஜிம்மி

‘என்ன நடந்தது?’ என்றேன்

‘இரண்டு நாட்களுக்கு முன் எனது எஜமானின் ‘நட்பு’ பற்றிய சொற்பொழிவு என் காதில் விழுந்தது தான் காரணம்’ என்றது ஜிம்மி

‘அதற்கும் உன் மனச் சோர்வுக்கும் என்ன தொடர்பு?’ என்றேன்

‘‘எனது எஜமான், நட்பு ஒரு வரப்பிரசாதம், பகைமை உணர்வின்றி வாழும் ஒவ்வொரு கணமும்
வாழ்க்கை வசந்தமாகிறது என்றார்’ என்றது ஜிம்மி

‘அவர் சொல்வது நியாயமானது தானே!
எதற்காக நீ சோர்வடைய வேண்டும்’ என்றேன்

சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு
கண்களை உயர்த்தி காதுகளைத் தொங்கவிட்டு....

‘நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த பூனையை
விரட்டி அடிக்கவில்லையாம் நான் என்று விடிந்ததில் இருந்து விடாமல் திட்டிக்கொண்டிருக்கிறார் எஜமான்’ என்றது ஜிம்மி.

நன்றியுடன் – கே.ஜி. மாஸ்டர்

எழுதியவர் : கே.ஜி. மாஸ்டர் (20-May-15, 11:16 am)
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே