நடக்க முனைகிறேன்

நடக்க முனைகிறேன் நான்...
இரவின் நடுப்பகுதியை அடைகிறேன்
பசி அதிகமாகிறது
நிலவை தின்றுவிட நினைக்கிறேன்
கனவின் ஏணிப்படிகள் துருப்பிடித்து கிடக்கின்றன. ..
காற்றில் அமர்ந்து அடையலாம்
அது காமம் பழுத்து சில்மிஷம் செய்கிறது
இலைகளோடு
பசி இன்னும் அதிகமாகிறது,,
உறக்கம் விழிகளுக்கு தூண்டிலிடுகிறது
பறவைகளின் பாடல்களை
காதுகளுக்குள் ஊற்றுகிறது இயற்கை
பின்னிரவு மெல்ல மெல்ல நகர்கிறது
கடலை நோக்கி
நான் நதி வழியே நடக்கிறேன்
மரங்களை பிடித்தபடி கடலை அடைந்திடுவேன்.
வானத்தட்டில் வைக்கப்பட்டிருக்கும்
இளம் சூரியனை தின்றுதீர்க்க. ......