காலையில் ஒரு கிழவியை கண்டேன்

வழமையான என் அலுவலக பணி பேருந்து பயணம் ..அமைதியாக சன்னலோர இருக்கை அமர்வு சில நிகழ்வுகளை கண்டும் காணாமலும் பயணித்துக்கொண்டு இருந்தேன் .

ஒரு நிறுத்தம் வந்தது அறுபதை கடந்து எழுபதை எட்டும் அந்த மூதாட்டி என்று நினைக்கிறேன் .பேருந்து நின்றதும் உயரமான அந்த படிக்கட்டில் சாதரணமாக ஏறியது .நான் மனதுக்குள்ளே யோசித்துக் கொண்டு இருந்தேன் பாட்டி உட்கார் என்று சொல்லலாமா என்று .யோசித்து முடிக்கும் தருணத்தில் என் அருகில் இருந்த அக்கா பாட்டி உட்கார் என்றார் .பரவாயில்லை மா நீ உட்கார் என்ற அந்த பாட்டியை வலுகட்டயாமாக உட்கார வைத்தார் அந்த அக்கா ..

எனக்கு அந்த பாட்டியிடம் பேசும் ஆர்வம் மிகுந்தது பாட்டி உங்களின் வயதென்ன என்று முதலில் கேட்டேன் .நான் அம்மா முகத்தை கூட பார்க்கவில்லையம்மா பிறகு எப்படி நான் வயதறிவேன் என்ற மூதாட்டியின் குரல் தழுதழுக்கவில்லை ஒரு தன்னம்பிக்கை வாழ்க்கை நான் வாழ்ந்தேன் என்பதை எனக்குள் உணர்த்தியது ..

எனக்கு விவரம் தெரியாத வயதிலே என் அம்மா காலரா நோயால் இறந்தது .என் அப்பா என்னையும் என் அண்ணாவையும் நன்கு வளர்த்தார் .ஒரு ரூபாய் கொடுத்து கறி வாங்கி கொண்டு வந்து அதை பக்குவமாய் சமைத்துவைத்து விட்டு தங்கையும் நீயும் சாப்பிடு என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க சென்றுவிடுவார் என்று அந்த பாட்டி கூறியது என்மனம் கனமானது .தந்தையின் பாசத்தை எண்ண எண்ண என் தந்தையை நினைவூட்டியது ..
அந்த தந்தை ஊட்டிய சாப்பாடுதான் இன்றும் எனக்குள் தெம்பை கொடுக்கிறது என்று அவள் கூறியது எனக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியது ...அந்த தந்தையும் சிறிது காலம் மட்டுமே என்னுடன் இருந்தார் அவரும் தவறிவிட்டார் அதோட என் அண்ணாவும் காலமானார் இறுதியில் மிஞ்சியது நான் மட்டுமே என்று கூறி முடிக்கும் அந்த பாட்டியின் கண்ணில் துளி வருத்தத்தை கூட என்னால் காண இயலவில்லை இது பிறப்பின் நியதி இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாழ முடியும் என்ற இயல்பை வெகுவாக உணர்த்தினால் எனக்கு ...

ஊரார் தான் என்னை வளர்த்தது இதுநாள் வரை என் சொந்தம் யாரென்றும் கூட எனக்கு தெரியாது கல்யாணம் கட்டி என் நாலாவது மகன் பத்து மாதம் இருக்கும் போதே என் கணவரும் இறந்தார் என்றதும் இத்தனை இன்னலையும் தாண்டி இந்த மூதாட்டி இன்றும் பேருந்து ஏறும் அளவு தன்னந்தனியாக தன்னம்பிக்கையோடு வாழ்கிறாளே என்று எனக்குள் ஒரு பெருமிதம் .

இன்று என் நாலு பிள்ளைகளையும் அவர்களுது கஷ்டத்திலே அவரவருக்கு ஒரு வாழிகாட்டிவிட்டேன் என்று யதார்த்தமாக கூறுகிறாள் ....

இவரை தேடி எந்த வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாராதா என்ற ஏக்கத்தோடு முடிக்கிறேன் ....

எழுதியவர் : ப்ரியாராம் (20-May-15, 3:53 pm)
சேர்த்தது : பிரியாராம்
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே