பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை இருக்கிறது .
அதுவே இந்தப் போட்டியின் காரணி .
போட்டி பற்றிய விவரங்கள் விரைவில் .
போட்டியில் பரிசு பெறுபவர் படைப்புகள் அபி தோழரின் சிறுகதைகள் தொகுப்பு நூலில் இடம்பெறும் என்பதை மகிழ்வோடு இங்கு தெரிவித்துக் கொள்கிறோம் ....
நேசங்களுடன்
அபி வாசகர் வட்டம்