இதயங்கள் இடம் மாறும்

..."" ""...

குடைக்குள் மழையாய்
முத்தங்கள் இதழ்மாறும்
சத்தங்கள் சண்டையிட்டு
மெளனங்கள் குடியேறும்
இதயங்கள் இடம் மாறும் !!!

இடையிடையே தடுமாறும்
இளைப்பாற சிறு இடம்தேடும்
பெரும் சோகத்தின் வலியோடு
மோகத்திலது திளைத்தாடும்
இதயங்கள் இடம் மாறும் !!!

தேக இச்சையாய் காமத்தில்
பலருக்கு இங்கே சிலநேரம்
மழைகாலம் காளான்களாய்
காதலென்னும் பூமலர்ந்தே
இதயங்கள் இடம் மாறும் !!!

கண்ட நொடிப்பொழுதிலும்
நித்தமும் சண்டையிட்டும்
பிடிவாத குணம்கொண்டும்
பிடிக்காமல் பிடித்த பின்னே
இதயங்கள் இடம் மாறும் !!!

சிலந்தியின் பின்னலிதாம்
சிக்கியதொரு சிறு வண்டாய்
ஆணிவேரின் ஆலம்போல
பிணைந்த மனம் ஒன்றாகி
இதயங்கள் இடம் மாறும் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : v (21-May-15, 5:56 pm)
பார்வை : 132

மேலே