நீயும் ஏழை

ஏழைகள் வாழும் வீதியெல்லாம்
நடந்தே செல்கின்றார் இறைவன்
அவர்கள் வறுமை காண ஏழை வடிவில்
தானும் வருகின்றார்
இரக்கம் இல்லா செயல்கள் கண்டு
அதிர்ச்சி அடைகின்றார்
தன் கண்ணீர் மறைக்க போர்வைத்
தலைப்பால் முகத்தை மூடுகின்றார்
இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
இறைவன் எனக்கு
ஏனெனில் நானே மனிதனை படைத்தேன்
அவனுள் இருக்கும் இரக்கம் எங்கே/
இறைவன் என்னை மறந்தானோ/
ஈகை கருணை அன்பு இவனுள் இல்லையே
ஏன்தான் மனிதன் பண்பை இழந்தானோ
ஏழையின் கண்ணீர் சும்மா விடுமோ
சுடர் விட்டு எரியும் தீ போல் ஏழை
ஏங்கும் ஏச்சும் பேச்சும் காதில் ஒலிக்காதோ
உன்னைப் போல் மனிதன் அவனை
ஏங்க வைக்காதே
ஏழையும் மனிதன் என்பதை மறக்காதே
இறைவன் முன்னால் நீயும் ஏழை
இதையும் மறவாதே

எழுதியவர் : பாத்திமா மலர் (23-May-15, 1:12 pm)
Tanglish : neeyum aezhai
பார்வை : 107

மேலே