நலமும் வளமுமே நிலைக்கட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
மாலைநேர நடைபயிற்சி எனில்
மாசற்ற எழில்பூங்கா வெனில்
மாற்றிடும் மனதை சூழலால்
மயக்கிடும் வீசும் தென்றலால் !
ஆழ்ந்த சிந்தனைகள் பிறக்கும்
ஆழ்கடல் அமைதி என்றாலே !
ஆர்ப்பரிக்கும் உள்ளம் ஆனாலும்
அடங்கித்தான் போகும் அங்கே !
கபாலத்தில் கபடி நடைபெறும்
கருணைக் கொலைகள் நிகழும்
கணநேரத்தில் காட்சிகள் மாறும்
கண்மூடி ஒருநொடி இருந்தாலே !
மனதும் மந்தியும் ஒன்றுதானே
மதியும் முந்திடும் நிலைதானே !
நிலையை உணர்வதும் பிந்திதானே
நிகழ்வுகள் உரைப்பதும் அதுதானே !
சிந்தனை தேவையே மனிதனுக்கும்
நிந்தனை செய்யாது செவிமடுங்கள் !
சிந்தித்து செயல்படுவீர் என்றுமே
சீரான முடிவெடுங்கள் எதிலுமே !
நறுமணம் வீசட்டும் வாழ்வினிலே
நந்தவனம் ஆகட்டும் வாழ்க்கையும் !
நலமும் வளமுமே நிலைக்கட்டும்
இன்பமே இதயத்தில் பொங்கட்டும் !
பழனி குமார்