கோடையின் வெம்மை

கடுங் காம மிகுதியிடை
சுடும் பாலை வழி நடந்து
பற்றி எரியும் மூங்கில் கடந்து
பருக்கை கல் பாதம் பொசுக்க
இலை உதிர்ந்து
தலை குனிந்து
கொன்றை மரம் வாடி நிற்க
பரத்தமை நாடி செல்லும்
தலைவன் நிலை கூறும்
அக நானூற்று
பாலை நிலக் காட்சி
எங்கனம் இருக்கும் என்று
கோனார் தமிழுரை தேட வேண்டாம்
இன்றைய உச்சி வெய்யிலில்
ஒரு நிமிடம்
நடந்திருந்தால் போதும்
(அடிக்கிற வெய்யிலில் என்னமோ ஆயிடுச்சு..... )