தனிமையில் என் பெயர் மட்டும்

"ஏழு பிறவி எடுத்தாலும்
நீதான் என் உயிர்
என்று சொல்லி சொல்லி
என்னை காதலித்தாயே "

"இன்று
ஏழு மாதத்தில்
என்னை ஏரெடுத்து பார்க்காமல்
சென்று விட்டாயே!

"உன் மூச்சு காற்று
என் மீது
தீண்டா விட்டால்
நான் இல்லை என்று
சொல்லி சொல்லி
என்னை காதலித்தாயே !!

"இன்று
என் மூச்சு காற்று
நின்று போனதும்
நீ ஏரெடுத்து பார்க்காமல்
செல்கிறாயே!!

"நாம் சந்திக்கும் போதேல்லாம்
உன் பெயரும்
என் பெயரும்
என் கைகளில்
எழுதி எழுதி
என்னை காதலித்தாயே "

இன்று

என் பெயரை மட்டும்
கல்லறையில் எழுதி விட்டு
என்னை மட்டும்
தனிமையில்
விட்டு சென்று விட்டாயே பெண்ணே!!! ்

எழுதியவர் : ராஜா (24-May-15, 1:23 am)
சேர்த்தது : ராஜாரஞ்சனி
பார்வை : 133

மேலே