வாய்ப்பொன்று கேட்டேன்
அம்மா..
பிணமாய் மாறி பிழை ஒன்று நான் செய்ய...
உன் வாழ்வின் அர்த்தம் என் பிழை ஆகியதே..
மாரோடு சாய்த்து மாரியாய் நீ அழுக..
உன் கண் துடைக்க உயிர்கொண்டு எழுவேனோ..
ஒரு நொடி வேகத்தால் ஒரு உண்மை மறந்தேனே..
நான் இல்லா உலகில் நீ எப்படி சிரிப்பாயோ..
உன் புன்னகை திருடி உயிர் விட்ட பாவிக்கு..
விதியை மீறி வாய்ப்பொன்று கிடைக்காதோ..
உயிர் வாழ இல்லை.. உன்னை வாழ்த்த மட்டும்.. அம்மா என்று..!