கண்கள்
கண்கள்….!!
*
எங்கெங்கோ தேடின
கண்கள்
எங்கேயிருக்கிறாய் என்று
காட்டிக் கொடுத்தது.
உன் அசையும்
உன் சிரிப்பலையும்
அருகில் நெருங்கி வந்துப்
பார்த்தேன்…. ஏமாந்தேன்
அது நீயில்லை என்பது
உறுதியானது
உடம்பெல்லாம் வியர்த்தேன்
வெட்கத்தில் குனிந்தேன்
நடந்தச் சம்பவம்
நான் சொன்னதைக் கேட்டு
நீ சிரித்தாய் ரொம்ப நேரம்
அந்தச் சிரிப்பில் மலர்ந்த
உன் முகம் தான்
எத்தனை அழகு….!!
*