நிழல்கள்

குள்ளமானவன்..
உயரமாய் தெரிவதும்..
பின் அவனே இன்னும்
குள்ளமாய் தெரிவதும்..
..
உயரமானவன்...
குள்ளமாய் தெரிவதும்..
பின் அவனே இன்னும்
உயரமாய் தெரிவதும்..

..
முன்னும் பின்னுமாய்
மேலும் கீழுமாய்
நகரும் ஆதவன்..ஒளியினால்
அன்றி..
யாதொரு உண்மையும்
அதில் இல்லை..

இப்போது சொல்..
உனது
உண்மையான உயரம்
உனக்கு
தெரியும் அல்லவா!
அல்லது இனிமேல்தான்
அளக்க வேண்டுமா?
..
எப்படியோ..
நிழல்களின்
உயரக்கணக்கை
தூக்கிப் போடு!
தொடர்ந்து ..
நடை போடு..!

எழுதியவர் : கருணா (25-May-15, 5:21 pm)
Tanglish : nizhalkal
பார்வை : 1066

மேலே