விடிவெள்ளி யாகா யோசொல் =அறுசீர்விருத்தப் பா==

எழுதுங்கள் ! கவிதை கூட்டி
==எண்ணுங்கள்! 'எழுத்தில்' வந்த
பொழுதுங்கள் 'எண்ணம்' என்றே
==போடுங்கள்! புகழும் வேண்டின்,
பழுதெங்கு கண்ட போதும்
==பாடுங்கள் திருந்தச் சொல்லி!
உழுதிங்கு போட்ட பூமி
==ஒரு நாளில் விளைச்சல் காட்டும்!

அழுதால்தால் பால்கி டைக்கும்,
==அதுபிள்ளை யான போது!
உழுதால்தான் பயன்கி டைக்கும்,
==ஒருமனிதன் ஆன பின்பு!
தொழுதாலும் கிடைக்கு மென்று
==தொடர்ந்தொருவர் பின்னால் சென்றால்,
விழுந்த,எரி கல்லா வாய்,நீ!
==விடிவெள்ளி யாகா யோ?சொல்!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (25-May-15, 6:36 pm)
பார்வை : 76

மேலே