இன்னும் ஒரு கண்ணி பொள்ளாச்சி அபியின் சிறுகதைகள் திறனாய்வு போட்டி

தனிமனிதனின் நடத்தை மனித வாழ்வின் பல்வேறு நிலைகளில் அமைவதாக சமுதாயம் உருவாக்குகிறது. ஒருவன் தன்னைப்பற்றி உணர சமூகம் இன்றியமையாததாய் இருக்கிறது.மனம் வளர்ச்சி பெறவும் அறிவு வளர்்ச்சி பெறவும் அவசியமாகிறது.

கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களின் "இன்னும் ஒரு கண்ணி"சமுதாய விழிப்புணா்வு சார்ந்த கதை தொகுப்பு வாசிக்கும் அனைவரையும் ஈர்த்துவிடுகிறார் ஆசிரியர்.

"விழிப்புணர்வைத் தூண்டும் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறான் கணேஷ்.இவனோடு போட்டியாக 20வருட நட்பு சிதையாமல் நல்ல நண்பர்களாக மனதில் நிற்கின்றனர் பாலகிருஷ்ணனும் வரதராஜனும்..

தன் மகனைப்பற்றிய நண்பன் சொன்ன அதிா்ச்சியான தகவல் மட்டுமின்றி இன்பத்திலும் இணைபிரியா நண்பர்களாக சித்தரித்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

விபச்சாரி வீட்டிற்கு சென்ற தன் மகன் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு வருமோ?அவனை யாராது கண்டு இழிவாகப் பேசிடுவரோ?என மனம் அலைபாய்வதே தந்தைக்குரிய பாத்திரத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர்.

"தாங்குவாளா?தன்மகன் ஒரு விபச்சாரி விட்டுக்கு போனான் என்று தெரிந்தால்? இவளால் ஜீரணிக்க முடியுமா?என மனைவியிடம் சொல்லத் தயங்கிய விதம் தாய் பாசத்தை சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

"என்ன மன்னிச்சிடு கணேசா" என தந்தை மகனிடம் கெஞ்சும்போது கண்களில் நீராய் வளர்க்கிறது கதையோடு மாறியும் விடுகிறோம் ஆசிரியரும் தந்தையாக மனதில் நிற்கிறார்

எமது சொந்த படைப்பு
அன்புடன்
ஜெயராஜரெத்தினம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-May-15, 11:03 pm)
பார்வை : 122

மேலே