விபத்து பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

மலரில் பனித்துளிகள் மொய்ப்பதற்கு முன் வானிலுள்ள கார் மேகத்தில் ஒழிந்திருப்பதை போல நிகழ்கால வருடல்களுடன் கடந்து சென்ற நிகழ்வுகளால் கருவை நகர்த்திச் சென்று ஆழமான படிப்பிணைகளை இச்சிறுகதை உணர்த்தி நிற்கிறது என்றால் பலியாகாது.'விபத்து' தலைப்பே பயங்கரமாக இருக்கிறது. அதே போல் கதையின் கருவும் ஆழமாக வரிகளில் புதைக்கப்பட்டுள்ளதால் கதையோடு தலைப்பு பொருந்தி நிற்கிறது.

கதையின் ஆரம்பத்தில் மேட்டுத்தோப்பு பன்னாடி 'பார்வையிழத்தல்..,செவிடாகிப்போதல்...,முக்காடு அணிந்து நடமாடுதல்..'என்ற வருடல்கள் சிறப்பாக அமையப்பெற்றுள்ளதால் வாசகன் கதையில் தொடர்ந்து என்ன நடக்கபோகுது என்று படிக்க முனையும் நேரம் 'மாரிமுத்து' எனும் கதாபாத்திரத்தின் வருடல்கள் கதையை முழுமையாக படிக்கவேண்டும் என்ற ஆவலை மேலும் அதிகரிக்கிறது.

'முப்பது குடிசைகள் அமையப்பெற்றுள்ள இந்தக் கிராமத்தில் பஸ் தரிப்பிடமொன்று இல்லை.சப்கலேக்டருக்கு ஒவ்வொரு திங்களும் மனுகொடுத்தாலும் எந்த மாற்றமும் நேரவில்லை' என்ற வரிகள் கதையின் வளர்ச்சியில் பெரிதும் தாக்கம் செலுத்துகிறது
அதாவது கிராமப்புற பிரதேசத்தின் தேவைகள் அரசினால் நிறைவு செய்யப்படுவதில்லை மக்கள் அன்றாட ஜீவனோபாய தேவைகளை நிறைவேற்ற பெரிதும் இன்னல் படுகின்றனர் என்ற நிகழ்கால உண்மையை படிக்கும் போது அழகாய் சொல்கிறது கதையின் போக்கு

"மாரிமுத்துவின் செருப்பில்லாத கால்களில் சூடு ஏறியது.கால்களை சிலநிமிடங்கள் மாற்றிமாற்றிவைத்து,சமாளிக்கப் பார்த்தும்,வெப்பம் குறையவில்லை..,நல்லவேளை,பத்தாம் நம்பர் தனியார் பஸ், தூரத்தில் வருவது தெரிந்தது.மாரிமுத்து உடனே,தனது ஊருக்குச் செல்லும் அந்த எட்டடி இட்டேரிப் பாதையைத் திரும்பிப் பார்த்தான்.யாரேனும் ஊர்க்காரர்கள் வந்தால் சீக்கிரம் வரச்சொல்லிவிட்டு,பஸ்ஸை நிற்கச்சொல்லலாமே..! யாரும் வரவில்லை"என்ற கதை வரிகள் தன் தோழன் மேல் ஒவ்வொரு மனிதனும் அன்பு வைத்தல் வேண்டும் என்ற படிப்பினையை எமக்கு சொல்லித்தருகிறது.அந்த கோடை அவனை சுடும் போது அழகாக நேர்ந்த சம்பவமொன்றை"
இந்த ஊரைச்சுற்றியுள்ள பன்னாடிகளின் காடுகள்,தோட்டங்களில்,அவசரம் கருதி,வெயிலின் உக்கிரத்தை பொருட்படுத்தாமல்,அவன் பலமுறை வேலை செய்திருக்கிறான்.அப்போதெல்லாம் வேலை செய்யும் வேகத்திற்கு,வெயிலின் சூடு உறைத்ததேயில்லை"மேற்படி வரிகள் மூலம் அழகுபடுத்தி 'செய்யும் தொழிலை தெய்வமாய் நினைத்தால் வலிகள் கூட சுகமாகும்' என்பதை தெட்டத்தெளிவாக படம் பிடிக்கிறது.

அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மந்தகரமாகவே இடம் பெறுகிறது என்பதை
,"சாலையின் தார்க் கறுப்பில்,கானல்நீருடன் கலந்து உறவாடி ஓவியம்போல அசைந்து வந்துகொண்டிருந்தது கவர்ண்மென்ட் பஸ்"மேற்படி வரிகளால் அழகாய் சொல்கின்றார் எழுத்தாளர்.
மாரிமுத்து பஸ்ஸில் அம்ர்க்கையில் அமர்கையில் தன் பக்கத்திலிருந்த நபரின் தூக்கம் களைந்து அவனை பார்க்கும் போது " “சின்னசாதி நாயி,என்ன தெகிரியமிருந்தா,எனக்கு சமதையா உக்காருவே..?..
வெள்ளையும்,சொள்ளையுமா எங்களை மாதிரி துணிபோட்டுகிட்டா,நீ எங்காளு ஆயிடுவியாக்கும்..இமருவாதை தெரியாத நாயி." போன்ற வரிகள் எஜமானத்தனத்தின் கோரத்தையும்
"தனது தந்தையின் காலத்து அடிமைத்தனம்,அப்படியே ஊறிப் போனதிலும்,கடவுளுக்கு நிகரானவர்கள் எஜமானர்கள் என்று கற்பிக்கப்பட்டிருந்ததையும் விட்டு வெளிவர முடியாமல், அவரது ஏச்சுக்களை வாங்கிக்கொண்டு,மாரிமுத்து இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்."போன்ற வரிகள் இன்றைய சமுதாயத்திலும் பழமை எனும் சம்பிரதாயத்தின் மிச்சம் எஞ்சியுள்ளது என்ற அறியாமையின் இன்னலையும் சுட்டிக்காட்டுகிறது.

எதிர்பாரத விதமாக விபத்தொன்று நேரும் போது அவ்விடத்தில் அரங்கேறும் காட்சிகளை மிக எளிமையாக யாவருக்கும் விளங்கும் வண்ணம் குறிப்பாக குழந்தையின் அழுகைகள்,பெண்ணின் அலறல்கள் இவற்றை விட பன்னாடி எனும் பணக்கார திமிரு பிடித்தவனின் மரண அபாய தருணங்கள் போன்றவற்றை முன் நிறுத்தி சொல்லிக்காட்டும் விதம் மிக அருமை.

இறுதியாய் மேட்டுத்தோப்பு பன்னாடி உயிருக்காய் போராடும் போது அவருக்கு உதிரம் தேவைப்படுகிறது தாதி மாரிமுத்துவை நாடி பரிசோதனை செய்தல்,இருவரின் உதிரமும் ஒரு வகையாக இருத்தல்,தாதியின் ஆச்சரியம்...,என் உதிரமும் அவர் உதிரமும் ஒன்று தானா?என்று அழுத்தத்துடன்
மாரிமுத்து கேட்கும் கேள்விக்கு தாதி பதில் சொல்லும் விதம் குறிப்பாக 'நாம் எல்லாரும் மனிதர்கள் தானே!'என்ற நெஞ்சை பிழியும் கதை வரிகளால் உலகில் பிறந்த மனிதனெல்லாம் சமமானவர்கள் சாட்சி உதிரத்தின் செந்நிறமும் தாயின் கருவறையும்..,என்று படிக்கும் வாசகனுக்கு மதியில் உறையும் வண்ணம் கதாசிரியர் கதையை நிறைவு செய்வது சாலச்சிறந்தது.


மேற்படி திறனாய்க்கட்டுரை என் சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்
எழுதியவர்:மு.ஹ.மு. ஸர்பான்
இடம்:ஓட்டமாவடி-03 இலங்கை
தொலைபேசி இல:94 756795952
தேசிய அடையாள அட்டை இல:972410063V

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (25-May-15, 10:25 pm)
பார்வை : 194

சிறந்த கட்டுரைகள்

மேலே