காதலின் விளிம்பில்

அன்பே
நான் காதலில்
உன் கண்களின் விளிம்பில் இருக்கின்றேன்!

அதை
கண்ணீராக வெளி விடுவதும்
காட்சியாக உள் வாங்குவதும்
உன் மனதில் தான் உள்ளது ...........

குடும்பம் என்று சொல்லி குழப்பிவிடாதே,
பந்தம் என்று சொல்லி
என்னை பாழ்படுத்திவிடாதே,
நட்பு என்று சொல்லி நண்பனாக்கிவிடாதே!

கற்பு என்ற காதல் சொல்லால்
என்னை உன் காதலன் ஆக்கி விடு .........
உன்னை என் கரம் சேர்த்து 'கணவன்' ஆகி விடுகின்றேன் .............

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (26-May-15, 9:52 am)
Tanglish : kathalin vilimbil
பார்வை : 118

மேலே