ஹைக்கூகள்-முஹம்மத் ஸர்பான்

செல்போன்
----------------
எண்ணங்கள் அலை மோதுகின்ற
வண்ணங்கள் நிலை மாறுகின்ற
உள்ளங்கைக்குள் பொத்திவைக்கப்பட்ட இதயம்

மழை
--------
விண்ணின் தாகத்தால் முகிலின் கண்ணீர்
மண்ணை நனைக்கும்.., ரவிவர்மாவின் தூரிகைக்கு எட்டாத
ஒன்றோடு ஒன்று ஒட்டாத ஓவியம்

சிகரெட்
----------
மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பதற்காய்
மனிதனால் நாசிக்குள் அனுப்பப்படும்
சுவாசக் காற்று.

மரம்
-------
சொந்தக்காலில் எழுந்து நின்றாலும்
கொள்ளைக்கு துணைபோகின்ற
வாயில்லா ஜீவன்.

மது
-----
ஆசையால் ஏற்பட்ட தாகம்
பாடையில் போகும் வரை
தெளியாத போதை

பெண்
---------
மண்ணில் உயிர்களை படைக்க
உலகிற்கு அனுப்பட்ட கண்
கண்ட தெய்வங்கள்.

மடிக்கணணி
------------------
பல் கலைக்களஞ்சியங்கள் புழுதி
படிய மூடி வைக்கப்படுவதன் காரணம்
திறக்கப்பட்ட மடிக்கணனிகள்

அம்மா
----------
கருவெனும் போர்க்களத்தில் உதிரம் சிந்தி
உருவில் அழகை முகத்தில் தந்து
கடவுளால் நினைப்பதை சாதிக்க படைக்கப்பட்டவள்

திருக்குறள்
----------------
மனிதனின் பாவமான உள்ளத்தை
தமிழ் எனும் அர்ச்சனைப் பூக்களால்
ஒருமைப்படுத்துகின்ற உலக பொதுமறை.

நண்பன்
------------
நினைவுகளை ஒளிவுமறைவுயின்றி
கொட்டப்படுகின்ற உயிரோட்டமான
நாட்குறிப்பு நண்பன்.



சட்டம்
---------
கறுப்புச்சட்டை அணிந்த அலிபாபாக்களும்
காக்கிச்சட்டையுடைய 40 திருடர்களும்
எழுதுகின்ற நீதிக்கதை.



நிலா
-------
தனிமையில் உரையாடும் உள்ளத்திற்காய்
நியூட்டனால் கண்டுபிடிக்கப்படாத நான்காம் விதி
அழகான பெ(வ)ண் நிலா.

விலைவாசி
----------------
விண்ணினை நோக்கி எறியப்பட்ட
மென் மலர்கள் கல்லாய் மாறி
ஏழையின் தலையில் விழுகிறது,


பள்ளி
----------
சாதனையாளர்களை பற்றி
எதிர்கால அறிஞர்களால்
விமர்சிக்கப்படும் விவாத மேடை

கல்லூரி
------------
புத்தகங்கள் மட்டுமின்றி
வாழ்க்கையும் கற்பிக்கப்படும்
உலகின் நிதர்சனம் .

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (26-May-15, 11:30 pm)
பார்வை : 193

மேலே