கொஞ்சம் ரீமிக்ஸ்

( ரீமிக்ஸ முயற்சி - இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன - மரியான் )

சுத்தி சுத்தி என்ன பார்க்காதே பெண்ணே
சுட்டும் விழியில நெஞ்ச சுழற்றுற ஏன் கண்ணே

உன்மேலபட்ட காத்துதான் என்மேனி எங்கும் பரவணும்
உள்ள நுழையனும் உசிர் உருகணும் மெல்ல பெண்ணே

உன்மேலபட்ட காத்துதான் என்மேனி எங்கும் பரவணும்
உள்ளம் கரையனும் உசிர்பிரியனும் மெல்ல பெண்ணே

உயிர்வரைக்கும் நீயாக என்னுள்ளே புகுந்துகிட்டு புகுந்துகிட்டு புலம்பவச்சாயே
கண்பார நேரத்தில தூசுபோல நுழைஞ்சிபுட்டு நுழைஞ்சிபுட்டு துடிக்கவச்சாயே

என் கண்ணுக்குள்ள வாயேன் அந்தக் காட்சியப்போல
உன் நெஞ்சுக்குள்ள ஒட்டிக்குவேன் உசிரப்போல

என் கையுக்குள்ள நீயும் தெளிஞ்சுடுடா நீரா
உன் சொற்படியே நடந்தாலும் சிக்கிக்குறேன் கொஞ்சம்

சுத்தி சுத்தி என்ன பார்க்காதே பெண்ணே
சுட்டும் விழியில நெஞ்ச சுழற்றுற ஏன் கண்ணே

காதலோடு உனக்காக இறவாம எப்போதும் ஏங்கிநிற்பேன் ஏங்கிநிற்பேன்
என் காலுரெண்டும் சுழலுதே சுழலுதே தன்னிலை மறந்துதான் கதறுதே

இந்த காதல் வந்து இழுக்குது உன்னையும் என்னையும் இறுக்குது
உன்ன இறுக்க என்ன இறுக்க நம் உசிரு உருகுமே

உடல் இத்துப்போன பின்னும் நீ வந்தால் சிலிர்க்குதே
உசிருக்குள் நீவந்தால் இனிப்பாக்கி நான் ருசிப்பேன்

என் உசிருக்குள்ள நிலைக்கணும் நம் உசிரு ஒன்னா மாறனும்
உன் தலையோரம் என் கைகள் மெல்ல புகுந்திடனும்

நீ என்னுள் வந்து சேரனும்
நாம் என்றும் ஒன்னா வாழனும்
நம் காதலாலே புது உலகிலும் உயிர்வாழனும்்

( ரீமிக்ஸ முயற்சி - இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன - மரியான் )
## மறுபதிவு ## குமரேசன் கிருஷ்ணன் ##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (27-May-15, 6:34 pm)
பார்வை : 211

மேலே