மணவிழா
என் கற்பனைகளை கலையாக்கி ,
என் கவிகளைக் காதலாக்கி ,
நம் உறவுகளை இணைத்து,
நம் உணர்வுகளை குழைத்து,
மூன்றாம் முடிச்சை பிணைத்து,
என் வாழ்வின் முதல் பகுதியின் முற்றுப் புள்ளியாய்,
உன்னோடான உன்னத வாழ்விற்கு ஆனந்த(ஆரம்ப)ப் புள்ளியாய்,
உனக்கும் எனக்குமான மணவிழா,
என் வருங்காலம் காண இயலாத திருவிழா...!