இயற்கைக்கு சமர்ப்பணம்
முகிலே உன்
முதல் துளியை எனக்கு நீ
அளிப்பதென்றால்
மண்டியிட்டு கையேந்துகின்றேன்!
மயிலே உன்
தோகயினை என்னக்காக
ஒருமுறை விரிப்பாய் என்றால்
என் கண்ணீரை மழையாக பொழிந்துவிடுவேன்!
தென்றலே நீ
என் தனிமையில் இமைகள்
தொட்டு சென்றால்
உன்னை அனைத்துகொள்வேன்!!
பூவே உன்
முதல் தேனை எனக்காக
நீ தேக்கி வைத்தால் -காதலின்
முதல் முத்தத்தை உனக்கு அளிப்பேன் !
சாகரமே உன்னக்கு மட்டுமே
தெரிந்த உன் முதல் முத்தினை
எனக்கு அளித்தால் உன்
ஒரு துளியை அந்த நிலவிற்கு பரிசளிப்பேன்!
இயற்கையே
இது சாத்தியமா என்பதைவிட
நீ ரசிக்கவேண்டும் என்பதற்காக
இதை உனக்கு சமர்பிகின்றேன் ..........................
அ. மனிமுருகன்

