ஹைக்கூ
உலகத்தை ஒரு புள்ளியில்
அடக்கும் எழுத்தாளனுக்கு
எழுத ஒரு எழுது கோள் இல்லை
சோகம் நிறைந்த கதையில்
கண்ணீர் வருகிறது ஆனால்
அந்த காகிதம் கலங்காமல்
இருக்கிறது...அடுத்த பக்கத்தில்
முடிவு வரும் என்று
பிரியமாக பறந்த
பறவைகள் பிரிந்தன கூடு
செல்லும் போது
சொல்ல மறந்த கதையில்
அனைத்தையும் சொல்லியிருகிறார்
கவிஜன் ஆனாலும்
எதை மறந்தார் அந்த கதையில்
அணைத்து உயிர்களையும்
அன்பு செய்யுங்கள் செபம்
முடிந்த பின் ஆட்டுக்கறி பிரியாணி
சிக்கன் 65
பிரச்சனை வரும் என்று
இந்த பாலம் மறைக்க
பட்டுவிட்டது ..அவ்வபொழுது மழையில்
தென்படுகிறது வானவில்
உன் மௌனத்தில் கூட
எழுத்து பிழை உள்ளதடி
நாய் வால் போன்ற
அவள் இடை அழகு
மாட்டுவால் போன்ற
அவள் கூந்தல் அழகு