தனிமை காதலன்
சல சல நீரோட
சிலு சிலு குளிரூட்ட
கம கமக்கும் சந்தன மரம்
கண்டு மயங்குதே எந்தன் மனம்
தேகம் தீண்டும் இளங்காற்று
தென்றலாய் என்னை வருடும்போது
சிறகுகளாய் நான் மாற
சிதறித்தான் போகுது என் நெஞ்சம்
தன்னந் தனிமையிலே
தவமாய் நான் சுற்ற
கருங்கல் பாறையிலும் காண்கிறேன்
காதலரின் பாதச்சுவடுகளை..!
தனிமையில் வந்ததேனோ என்று
தவிக்கும் நெஞ்சுக்குள்
இதமாய் வருடி செல்லும்
இயற்கையின் பாச கரங்கள்..!
இயற்கை அன்னை அவள்
இளந்தென்றல் தமிழ் பேச
தனிமைநிலை மறந்து
தன்னிலை தான் மறந்து
காதல் மொழி கேட்டேன்
காற்றெல்லாம் சிரிப்பு சத்தம்.