உன் வருகை எப்போது - தேன்மொழியன்

உன் வருகை எப்போது ..?
~~~~~~~~~~~~~~~~~~~~

விலகிய தருணத்தில்
விளக்கியப் பொருளில்
உடைந்த உருவத்தை
ஒட்ட வைத்தாலும் ஓவியம் தான் ..

புழுதிக் காற்றில்
வெட்கம் விதைத்த விரலையும்
வாய்க்கால் வரப்பினில்
பறந்து கடப்பது உன் சிறகு ...

ஒடிந்து வீழும் ஓலைக்குள்
முன்பு வாழ்ந்த குருவிக்கும்
வாரக் கடைசியின் வர்ணத்தை
உணர்த்த துடிப்பது உன்னுடை ...

வேப்பமர நிழலொன்றில்
வெப்பம் விரட்ட புருவத்தில்
யுத்தம் திரட்டிய ஏக்கத்தை
உலர்த்தி எறிவது உன் வருகை ..

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் (29-May-15, 2:47 pm)
பார்வை : 261

மேலே