உணர்வின் ஆரம்பம்

மழை நின்ற பின் வரும்
வானவில் அல்ல நான்
மறைந்துபோக;
நீ நினைத்தவுடன்
உருகி வரும் - உன் உள்ளத்தில்
உறைந்துள்ள பனிக்கட்டி நான்........!!!!!
உன் கண்களின் குளிர்ச்சி நான்
உன் இதழ்களின் மலர்ச்சி நான்
உன் உள்ளத்தின் உணர்ச்சி நான் ..........!!!!!
இப்படி உன்னுள் ஒவ்வொரு
முடிவின் ஆரம்பம் நான் தான்...........!!!!!
என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்