காகித கப்பல்

காகிதத்தில்
கப்பல் செய்த -என்
கை விரல்கள் இன்று
கவிதை எழுதுகிறது!

தூக்கம் அறியா- என்
இரவுகள் இன்று
என்னை தூங்க சொல்கிறது
கனவுகளுக்காக !

பசி தாங்க என் உணர்வு
இன்று தாங்கிகொள்கிறது
உன்
நினைவுகள் நிரம்புவதால்!

தூரத்தில் நீ இருக்கும்போதே
இப்படி ஒரு
மாற்றம் என்றால் - நீ
என் அருகில் வந்தால்
இதழ் தாகம் தீர்ந்துவிடும்!
இமை கதவு மூடிவிடும் ..................

என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்

எழுதியவர் : (29-May-15, 4:26 pm)
Tanglish : kaakitha kappal
பார்வை : 90

மேலே