பழங்கதை முதல்பலான கதை வரை
சூரியனின் கோபக் கொந்தளிப்பில்,
புவியே தகிக்கும் ஒரு மதியவேளை,
ஐ.டி.ஐ யே ஆழ்ந்துறங்க,
தென்மேற்கின் ஓர்அறையில்,
பேச்சொலிகளும்,
சிரிப்பலைகளும்,
கர்நாடக சங்கீதமாய் வழியும்,
அந்த வகுப்பில்
என் எண்ணங்களுக்கு வடிவமும்,
எழுத்துகளுக்கு விமர்சனமும்,
பழக்கத்திற்கு தோழர்களும்
கிடைத்து இரண்டு வருடங்களாயிற்றா?
பழங்கதை முதல்...
பலான கதைவரை...
பலகதை பேசி மகிழ்ந்தோம்...
இதோ,
கைகெட்டும் தூரத்தில் பிரிவு,
இது நிரந்தரமில்லை,
உலகம் உருண்டையெனில்
ஒருநாள் சந்திப்போம்...
பழக்கம் எனும் பாதையில்
நண்பர்களே,
நீங்கள் நடந்த
காலடிச்சுவடுகள்,
அழியாத தடங்களாய்
என்றும் என் மனதில்...
முன்னர் எழுதியது...