பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வுப்போட்டி- புயலின் மறுபக்கம்

“ உங்கபேர் என்னம்மா..?”

“தேவகி”

“இறந்தது யாரு..?”

“என் புருஷன்”

“வயசு.?”

“இருபத்தெட்டு”

“பேரு..?”

“அப்துல் காதர்.”

“என்ன..என்ன சொன்னீங்க..?”

“என் கணவர் பெயர் அப்துல் காதர்..”இம்முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தேவகி.

என்ன கலப்புத் திருமணம் செஞ்சிகிட்டிங்களா?

இல்லை காதல் திருமணம்,

என்னம்மா நீ சொல்ற?. நீ இந்து, உன் கணவன் முஸ்லிம் அப்போ கலப்புத் திருமணம்தானே?

அய்யா..! ஆணையும் பூனையும் திருமணம் செஞ்சா அது கலப்புத் திருமணம், ஆடும் மாடும் திருமணம் செஞ்சா அது கலப்புத் திருமணம், மனிதனும் விலங்கும் திருமணம் செஞ்சா அது கலப்புத் திருமணம். மனுசனும் மனுசியும் (மனிதனும் மனிதனும்) திருமணம் செஞ்சிகிட்டா அது எப்படிங்க கலப்புத் திருமணம் ஆகும்? என்று தந்தைப் பெரியார் சொன்னக் கருத்து வேதனை சுமந்த அந்த தருணத்திலும்கூட தேவகியின் வாயிலிருந்து விம்மிவெடித்து அடிமனதின் அழுகையுடன் வெளிப்பட்டது.

தேவகி கேட்டக் கேள்விக்கு பதில் உரைக்கமுடியாத அதிகாரி, தெரியாமல் வாயை கிளரிவிட்டோமோ என்று மனதிற்குள் எண்ணியவாறே, தனது வேலையில் கவனம் செலுதுவதைபோல் வேறுஒரு அதிகாரியிடம் பேசியவாறே தேவகியிடம் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார்.

===
மதத்தின் பெயரால் இன்று மட்டுமல்ல பலநூறு வருடங்களாக நடந்துகொண்டு இருக்கின்ற அக்கிரமங்களை சொல்லச் சொல்ல மாளாது. கழிந்துகொண்டு இருக்கின்ற ஒவ்வொரு நொடிகளிலும் ஏதாவது ஒரு மூலையில் மதத்திற்கு பலியாவோர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. பிரிவினைவாத சக்த்திகளின் வன்முறை வெறியாட்டங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்ற இன்றைய சூழலில் இயற்கையால் 10 சதவிகிதம் என்றால் செயற்கையால் 90 சவிகித அழிவை நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதுதான் உண்மையாகும். மதத்தின் அபாயத்தை உணர்ந்தே ''மதம் மக்களுக்கு அபின்'' என்று காரல்மார்க்ஸ் கூறுகின்றான். ''மதம் மனிதனை மிருகமாக்கும்'' என்று பெரியார் கூறினார்.

புயலின் மறுமக்கம் ஆசிரியர் அபி அவர்களால் மிக நுணுக்கமாக எழுதப்பட்டு இருக்கின்றது, மதசமர்களத்தைப் பற்றி அவரின் விவரிப்புகளை வாசிக்கும்பொழுதே காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றதை என்னால் தவிர்க்க இயலவில்லை. ஒவ்வொரு விடயங்களையும் ஆசிரியர் மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருக்கின்றார்.

மனிதருக்குள் பிரிவினைவாதங்கள் தலைதூக்கி நிற்கின்ற இன்றைய சூழலில் இதைபோன்ற கதைகளின் தேவைகள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மையாகும்.

அண்ணனும் தங்கையும் பேசிக்கொள்கின்ற காட்சியும், சண்டை களத்தின் காட்சியும், மருத்துவமனை காட்சியும் மிக நேர்த்தியாக பின்னப்பட்டு இருக்கின்றது. கதையில் இருக்கின்ற முக்கிய மூன்று காட்சிகளும் அதன் விவரிப்புகளுமே இந்த புயலின் மறுப்பக்கம் ஆகும்.

ஆசிரியர் அபி அவர்கள் இந்தக் கதையின்மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு நல்ல சமவாழ்வு விடயத்தை வெளிபடுத்தி இருக்கின்றார். அதோடில்லாமல் மருத்துவமனையில் சில சிறு பாத்திரங்களைக்கொண்டு மதவெறியர்களின் மண்டையில் ஓங்கி கொட்டி இருக்கின்றார். அய்யா ஆசிரியர் அவர்களே... மதவெறியர்களை ஓங்கி கொட்டினால் போதாது, கோடரி எடுத்து நடுமண்டையை அப்படியே பிளக்க வேண்டும், இனிவரும் படைப்புகளில் மண்டையை பிளப்பீர்கள் என்று நம்புகின்றேன். (என்னடா மதச்சண்டையை தூண்டுகிறான் என்று யாரும் எண்ணவேண்டாம், எழுதுகோலை ஆயுதமாகக்கொண்டு மண்டையை பிளக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றேன்).

புயலின் ஒருபக்கம் நன்றாகப் புரின்கின்றது, மறுப்பக்கம் எனது மரமண்டைக்கு சரியாகப் புரியவில்லை, தேவகி அப்படியே மனதில் நிற்கிறாள் அதே மருத்துவமனையில்.

சமூக அக்கறையோடு, சமூக நல்லிணக்கத்திற்காக எழுதப்பட்டு இருப்பதுதான் இந்த புயலின் மறுபக்கம் என்பது கதையை வாசித்ததும் புரிந்துகொள்ள முடிகின்றது.

அருமையாக இருக்கின்றது சிறுகதை.

நன்றிகளுடன்
நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (1-Jun-15, 11:37 pm)
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே