சிலிர்ப்பான என் முதல் விமான பயணம்
அங்குமிங்கும்
அலைந்தார் அப்பா
பரபரவென
பறந்தார் அம்மா
அடுத்த மாகாணம்
தாண்டா மகன்
அயல் தேசம்
தாண்டவிருப்பதால்
அலுவலகத்தை ஒத்தி
வைத்தாள் தங்கை
மட்டைபந்தை மடக்கி
வைத்தான் தம்பி
விடுப்பு விட்டாள்
கல்லூரிக்கு
கடைத்தங்கை
ஆசிர்வாதத்தோடு
எல்லா சாமியும்
துணைக்கு அனுப்பினர்
அம்மாச்சியும்
அய்யாவும்
அதுவரையிலும்
அமைதியாய் இருந்த
அம்மா துளிர்த்து விட்டார்
கண்ணீர் அவர் அம்மா
என்பதாலேயே
சமாதானத்தை
சாந்தமாய்
கொடுத்துவிட்டு
இருக்கை தேடி
அமர்ந்துகொண்டேன்
செக்-இன்
சிரமங்களையும்
இம்மிக்ரேசன்
இன்னலையும் கடந்து
விமானம்
ஓடுதளத்தில்
ஓட தொடங்கிய
அந்த நொடியில்
கண்களும் சற்றே
கலங்கியிருந்தன
விமானத்தில் பறக்கும்
சிலிர்ப்பையும் மறந்து
யாருக்கும் தெரியாமல்
கலங்கியிருக்கக்கூடும்
அப்பாவின் கண்களும்...!!!