ஜில்லுன்னு ஏறுது கிக்கு
ஒன்று உறுதி
இது வழக்கமான
சாக்கடையோரமல்ல -
எங்கெங்கோ
தள்ளிக் கொண்டு
போகப் படுகிறது என் உடல் -
ஒளிந்திருந்து
குடித்த கல்லூரி நாட்கள்...
ஆண்மைக்கு அத்தாட்சியாம்-
தகவல் தொழில்நுட்ப
சாதனையைக் கொண்டாடும்
சனிக் கிழமை மாலை -
பொருளாதார மந்தநிலை
கார்பரேட் கம்பெனி கைகழுக
டாஸ்மாக்கில் தஞ்சம் புகுந்தேன்
ஆறிலக்க சம்பளம் பறிபோனதால் -
கூறுகெட்ட குடிகாரனா
கிடைத்தான் காதலனாக -
ஒழிந்து போ என்ற மனைவி வீட்டார் -
அந்த மூதேவியால்
குடிகாரன் ஆகி விட்ட பதரே
ஓடிப் போ என்ற எனது பெற்றோர் -
சாக்கடையில்
கிடந்தார் அண்ணி -
தூக்கி வந்த ஒருவன்
என்ன சொன்னானோ
செருப்பு கிழியும் என்று
கதவடைத்து புலம்பும்
மனைவியிடம் சோறு கேட்டு
புலம்பிய மூத்த பிள்ளை -
என் சாயலில் இல்லை
இரண்டாம் குழந்தையென்று
எட்டி மிதிப்பேன் இல்லாளை -
லிவர் சிரோசிஸ்-
என் முகத்தின் மீது
திரை விழ உடலைச் சுற்றி
அழுகை குரல்கள் மெல்ல
காற்றில் கரைய .....
நினைவலைகள்...
கொஞ்சம் கொ..ஞ்ச...மா....ய்
தே....ய்......கி........ன்.............ற...................ன
===================================================================================
# I SUPPORT NANDHINI #
நல்லை சரவணாவின் முயற்சிக்கு நன்றியுடன் படைக்கிறேன்...