நான் மட்டும் மாறியதென்ன
நிலவும், நிலவின் அமைதியும், அமைதியின் அழகும் மாறவில்லை... நான் மட்டும் ஏன்?
தென்றலும், தென்றலால் அசையும் தென்னங்கீற்றும், தென்னங்கீற்றில் பிறக்கும் இசையும் மாறவில்லை... நான் மட்டும் ஏன்?
அன்னையும், அன்னையின் அன்பும், அன்பின் அளவும் மாறவில்லை... நான் மட்டும் ஏன்?
ஆவும், ஆவின் பாலும், பாலின் நிறமும் மாறவில்லை... நான் மட்டும் ஏன்?
எண்ணில் அடங்கா நினைவுகள்.., என்னில் அடங்கி இருக்க..,
"மண்ணில் அடங்கா விதை" போல், மரமாய்.., நாளும் வளரும் எண்ணங்களால், நான் மட்டும் மாறிவிட்டேன்... ஏன்?