வேரறுப்போம் வா

பொண்ணுங்களே பொண்ணுகளே

பொங்கி எழுங்க கண்ணுங்களே....

மண்ணுக்குள்ளே போகும்முன்னே

மாவீரம் காட்டுங்களே....!!!


காட்டுப் பக்கம் கதறல் சத்தம்

தேடிப் பார்த்தா கற்பழிப்பு !!!

குளத்துக்குள்ள மிதக்கும் சடலம்

தூக்கிப் பார்த்தா கற்பழிப்பு !!!


கல்லூரிக்கு போனப்புள்ள

திரும்பி வரல..கற்பழிப்பு !!!

கோவிலுக்கு போன புள்ள

வீடு வரல கற்பழிப்பு !!!


ஏழு மாச சிசுவ காணோம்

கண்டெடுத்தா கற்பழிப்பு !!!

நூறு வயசு கிழவி சாவு

அதுவும் கூட கற்பழிப்பு....!!!


தாய் கூட தனியாருந்த

மகன் தாய கற்பழிப்பு !!!

ஆத்தா இல்லா குமரிப்புள்ள

அப்பனால கற்பழிப்பு !!!


பள்ளிக்கூடம் போன புள்ள

வாத்தியால கற்பழிப்பு !!!

அர்ச்சனைக்குப் போன புள்ள

ஐயரால கற்பழிப்பு.....!!!


விந்து கழிவு சேந்து சேந்து

கருவறைகள் குப்பையாச்சி !!!

விதிய மட்டும் நொந்து நொந்து

விடியல் எல்லாம் கருத்துப் போச்சி !!!


பொறுத்து பொறுத்து அழிஞ்சாச்சி

பொங்கியெழனும் இனியாச்சும் !!!

பொறுக்கி கூட்டம் கூடிப் போச்சி

நொறுக்கி அடிக்கும் காலமாச்சி !!!


பொண்ணுங்களே பொண்ணுகளே

பொங்கி எழுங்க கண்ணுங்களே....!!!

மண்ணுக்குள்ளே போகும்முன்னே

மாவீரம் காட்டலாம் வா !

எழுதியவர் : தமிழச்சி (2-Jun-15, 12:12 pm)
Tanglish : veraruppom vaa
பார்வை : 421

மேலே