யாரைப் பிடிக்கும்
மதுரையிலிருந்து
பழனி வந்தார்கள்
மாரியும்
மாதவனும்
திவ்ய தரிசனம்
திருப்தியுடன்
இருவரும்
மாரியின் காணிக்கை
மூன்று நாள்
தினக் கூலி
நடை வலி
தலை முடி
மாதவன் காணிக்கை
மூன்று மணி நேரம்
சொகுசு பயணம்
சொற்ப முடி
நீங்களே சொல்லுங்கள்
ஞானப் பழம் இழந்தவனுக்கு
யாரைப் பிடிக்கும்