மாமன் மகள்

மாமன் மகளே
என்
மஞ்சள் நிலவே!
நீ என்
வாழ்வில் துணையாக வரவில்லை!
ஆனால் என் வாழ்வியல்
மாற்றங்களுக்கு காரணம் ஆனாய்,
உன் தாவணி காலம்
என் மனதின் பசுமரத்தாணியடி,
திருவிழாக்கள் எல்லாம் - நான்
ரசித்தது உன்னைதானடி.........
கைகள் தொடும் உரிமை
உன்னையன்றி யார் தருவார்!
கால் கொலுசின் காட்சிகளை
கண்களுக்கு கொலுவாக்கியது நீதானடி!
உன்னால்தான்
என் அரும்பு மீசைக்கும் ஆனவமடி,
சல்லிகட்டும் எனக்கு
சந்தன பொட்டை போல் ஆனதடி,
மச்சான் என்று நீ சொல்லிய
ஒரு வார்த்தையில் தான்
என் மலரும் நினைவுகள் ...................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்