முடக்கம்

முடக்கம்
=========

வரிகள் முடங்கின
ஏதோ ஒரு
முக்குடையாத முனையின்
முற்றுப்புள்ளியில் ம்ம்ம்

மறுக்கப்பட்டவைகள்
வெறுக்கப்படுகின்றதைப்போல்
சிலபொழுதுஅழகானவைகள் (சேர்த்து படிக்கணும்)
இப்படித்தான் தொலைந்துபோகின்றனபோல்

காற்றின் இடுக்கைக்
கண்டறிந்து
நூற்கோர்க்கத் திண்டாடுது
காக்கைமனம்

மையத்தில் இல்லாத
பார்வை மட்டுமே
மஞ்சத்தில் தோற்கடிக்கும் என்னை

இரவில்,,,,,நிலைக்கண்ணாடி
வெட்கி வளைந்த
அந்த நிர்வாணத் தருணத்தில்தான்
முகங்கள் இரண்டும்
வான் நோக்கின

சூழல் அழுத்திய சிரிப்பொலிபோல்
அவஸ்த்தையில் சிக்கிய
பெருமூச்சின் வேகம்
விடுதலைக் கோருகிறது

கருக்கலின் சற்றுமுன்னால்
மழைவில்கடந்த
அன்றில்போல்
வாசித்து ஒதுக்கிய
வாயாடி மனுக்களின் ஓலங்கள்
சப்தத்துடன் தொடங்கி
சப்தமில்லாமல் முடிவுற்றன
எங்கேயோ கரைந்து

எனக்குள் உன் காதலை
நீயே வெட்டி
நீயே துளிர்க்கச்செய்கிறாய்
முறிந்த மரங்களுக்கு
பச்சிலை வாசத்தின்மேல்
புதிய ஆசையின் துவக்கம்போல்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (2-Jun-15, 3:28 pm)
பார்வை : 142

மேலே