இது திருவிழா காலம் - ப்ரியன்
![](https://eluthu.com/images/loading.gif)
இது திருவிழா காலம் - ப்ரியன்
(சந்திப்பு : ஆறாம் சந்திப்பு)
.........................................
கடவுளுக்கு நன்றி
சொல்லியே ஆகனும்;
பிடித்ததாய்
படிப்பு வேலை வாழ்க்கை
கொடுக்காவிட்டாலும்
உன்னை காணக்கொடுத்த
மற்றுமொரு வாய்ப்புக்கு
.........................................
சாமி ஊர்வலம் தினம்
தொடங்கும் முன் கேட்கும்
வானவேடிக்கை;
தேவதை நீ வரும்முன்
காதுக்கு எட்டிவிடும்
உன் கொலுசொலிகள்
.........................................
இரவில் விடும்
வானவேடிக்கை கண்டு
பூரிப்பு அடைகிறாய் நீ;
அதுவோ
உனைக்கண்டதாலே
வானில் புன்னகைக்கிறது
.........................................
வேண்டுதலுக்காய்
கருப்பசாமி தூக்கிக்கொண்டு
ஊர்சுற்றி வந்ததால்
தோள்பட்டையில் வலி;
கண்களும் வலிக்கிறது
உந்தன் கடைக்கண்
பார்வைக்கு சுற்றியதால்
.........................................
ஊரே கூடித்தான்
தேரிழுத்துக் கொண்டிருந்தது;
நீயோ
ஒற்றைப்பார்வையால்
இழுத்து விடுகின்றாய் என்னை
.........................................
கோயில் வந்து கும்பிட்டு
அமர்கிறாய் வரங்கள் பெற;
சீக்கிறம் எழுந்துவிடு
சிலையோயென
திரும்பி பார்க்கிறார்கள் சிலர்
.........................................
கடைவீதிக்கு வந்தாய்
வளையல் பொட்டு
வாங்கி சென்றிடத்தான்;
இதயம் விற்க்க வந்தவளாய்
உன் பின்னே ஏனிப்படி நான்
.........................................
சடல் சர்பத் கலர்கிளாஸ்
பலூன் பஞ்சுமிட்டாய்
குடித்து விளையாடி பார்த்தேன்
இருந்தும் குழந்தைபோல்
மகிழ்ந்திட முடியவில்லை;
"எப்பவந்த" என கேட்டு
மாற்றிவிட்டு போகிறாய் நீ
.........................................
இந்த வருடம்
தலக்கட்டு பெருசுகள்கூடி
கூத்தும் கரகாட்டமும்
வைத்துவிட்டார்களேயென
கோபமாய் இருந்தேன்;
நீயுமதை பார்க்க வந்தாய்
இளையராஜாவின் கச்சேரி
கேட்க ஆரம்பித்தது
எனக்குள்ளே மட்டும்
.........................................