நெய்தானோ

பஞ்சுப் பொதிக்குள் உன்
பிஞ்சு உயிரைப் பொதித்தானோ...?
வெல்வெட் துணிக்குள் உன்
வண்ண உடலை மறைத்தானோ..?
மிருதுவான் ரோமத்தில் உன்
இலேசான இதயத்தை இணைத்தானோ...?
பட்டு போல் பாதத்தை
பதவிசாய் படைத்தானோ...?
பருத்திப் பூ போல்
சிறகுகளை சமைத்தானோ...?
பாலாடையில் ஓர் கடுகு
பறவை உம் தன் கண்கள்!
உங்களை படைத்தானா இறைவன்
நெய்தானா ..?வியக்கிறேன்
என்ன அழகு ...?
என்ன அழகு....?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Jun-15, 7:05 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 64

மேலே