வசப்பட்டவை

கடலை எழுப்பாமல்
கடலுக்குள் இறங்கும்
கடல் காதலன் மழை
-------------------------------------

மேகச் சல்லடை வழி
நீரூற்றி
நிலமகளுக்கு நீராட்டு விழா

--------------------------------------------

பொங்கும் கடலில்
வேகாத மீன்கள்

---------------------------------------

மரத்தின் விந்தில்
பலநூறு மரங்கள்

------------------------------------------

வெள்ளை உடுப்பில்
அன்னை இல்லா
தெரசாக்கள்

------------------------------------------

மலையின் அழுகை
அருவியாய் விழுகிறது

------------------------------------------

கருப்பாய் இருப்பதால்
கருப்பைக்குள்ளேயே
இருப்பதில்லை காகங்கள்

--------------------------------------------

செத்தவனின் இரத்தம்
வெள்ளையாய் வெளியேறியது
மேகச் சண்டையில்

---------------------------------------------------

ஒவ்வொருவனும் தலைவன்
எறும்பு அணியில்

---------------------------------------------

புணர்ந்த பின் மெத்தையாய்
மழைக்கு பின்
நிலம்

---------------------------------------------------

குடிசைக்குள் செல்வம்
பெயரில் மட்டும்

-----------------------------------------------------

எழுதியவர் : Raymond (2-Jun-15, 2:54 pm)
பார்வை : 96

மேலே