நொண்டி நிமிடங்கள்

நடு சாமத்திலும் கட்டுவித்த துர்ஸ்ட்ட கயிரை அவிழ்க்க முற்பட்டோம்...

மொழிந்த தோல்வியின்
சொச்சம் கண்ணில் வெளிர் நீராய் மிளிர்ந்தது

வண்ணங்கள் எம் வாழ்வினிலே வேண்டும்..

அதற்கு வசை பாடியே வாயையும்,வாழ்வையும் தீர்த்தோமே அன்றி

தீரமாய் விதி செய்ய மறந்தோம்..

வழி கிட்டவுமில்லே,
வலி வடியவுமில்லே..

மனம் செக்கிலே மடிந்து போய் தீர்ந்ததாய் சேதி கிட்டியது..

வண்ணங்கள்..
எங்கள் நிமிடங்களின் கனவு...

அழகு வர்ணங்கள்
எங்கள் வருடங்களின் கனவு

நொண்டி நிமிடங்களை தனியாட்ச்சி செய்கின்றோம்...

ஊமை நெஞ்சங்களை
தாழாது சுமக்கின்றோம்

செத்த பிணங்களின் வாழ்வு எம் வாழ்வு...

சோற்றை சுமக்க வயிறுண்டு ..
மானம் சுமக்க நெஞ்சுண்டு...

இரண்டிலும் மலமாகும் சோற்றையே சேர்த்தோம்...

விடுதலையும்,திறந்த வானமும்..
எங்கள் நாள் பட்ட கனவு....
அது கிட்ட நாள் பட்டு கொண்டுதான் இருக்கிறது

எதற்கோ முனைந்து,
எதையோ பிடிந்து
தேற்றி கொண்டும்,
தூற்றி கொண்டும் முடிய போகிறோம்..

சொர்ப இன்பங்களிலேயே ....தனி பெரும்
வாழ்வை உடைக்க போகின்றோம்...

எழுதியவர் : சிவசங்கர்.சி (3-Jun-15, 10:22 am)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 65

மேலே