சருகுகளில் மறைந்த இறகுகள்

சருகுகளில் மறைந்த இறகுகள் போல
சொல்லாமல் புதைத்து விட்டேன்
என் காதலை
உன்னிடம்

பிறகுகளில் தேடிய உணர்வுகள் காணேன்
தொலைத்து தான் விட்டேன்
சிதைத்துக் கொண்டேன்
என்னையே

பொய்கையில் மெய்யாய் போனது நானா
துவரலாய் தொட்டது நீயா
நடந்தால் சேர்வது
நாம்

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (3-Jun-15, 11:16 am)
பார்வை : 87

மேலே