அது குற்றமல்ல
சாமியார் : இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். அவனை யார் எங்கு வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம். அது குற்றமல்ல.
ஒருவன் : இதை நாளைக்கு கோர்ட்டுக்கு வந்து சொல்லணும் சாமி! கோவில்ல இருக்கற இறைவனை நாங்க வீட்டுக்கு தூக்கிட்டுப் போனதை குற்றம்ன்னு சொல்றாங்க.
------------
ஆண் : எவ்வளவு காலம் ஆனாலும் என்னைப் பொறுத்த மட்டும் பொம்பளைங்க கோழைங்க தான்.
பெண் : அதெல்லாம் அந்த காலம். ஆண்களுக்கு நிகரானவங்க நாங்கன்னு என்ன செய்து நிரூபிக்கணும் சொல்லுடா..! இப்பவே நிரூபிச்சு காட்டுறேன்.
ஆண் : வெரி சிம்பிள்! என்னைப் பார்த்து தைரியமா ஐ லவ் யூ சொல்லு. போதும் ..!!