ச்சும்மா
இப்போதைக்கு
நீ திரும்பிப் பார்க்காத
நொடிகளுக்கு மரணம்
என்றே பெயர் சூட்டலாம்...
ஒரு நாளும் வந்ததில்லை
வட்ட வட்டமாய் சில
வளையங்கள் விலகிச் செல்ல
கனவில் நீ..
முறைக்காதே
உண்மை அது தான்
கிள்ளாதே
பொய்யும் அது தான்..
ரோஜாக்களை
கிள்ளலாம்
ரோஜா கிள்ளக் கூடாது..
மொக்கை தான்
முகம் சுழிக்காதே
இன்னொன்று
கைவசமில்லை..
சிரிக்கிறாய்.
நேரம் பார்த்து
உள்ளே வரமாட்டார்
தபுசங்கர்..
குட்டாதே
உளறவுவாய் என
என்னை நீ
திட்ட நேரலாம்..
உதடுகளை ஏன்
திறக்க முடியவில்லை
ஓ நீ முத்தம் தந்தாயா?
எவ்வளவு போராட்டாம்
எவ்வளவு புலம்பல்
இதற்குத் தான்..
முறைக்காதே
உண்மை அது தான்.
கிள்ளாதே
பொய்யும் அது தான்..
--கனா காண்பவன்