பித்தனின் மொழிகள்

பல இலட்சம்
மலர்கள் என் தமிழில்
சொற்களாய்
கொய்யமுடியவில்லை
ஒன்றை கூட
உனை பற்றி கவிதை எழுத.


*****************************************


பகலவனின் பார்வை
இந்த பூமிக்கு
விடியல்
உன் ஓர விழிப்பார்வை
இந்த பித்தனுக்கு
விடியல்.


*************************************


எனக்கான வாழ்வின்
ஒரு அங்கமல்ல
நீயும் காதலும்
என் வாழ்வே
நீயும் காதலும்தான்.


**********************************


நீ என்னை
கடந்துவிட்டு
திரும்பி பார்த்த
அந்த ஒரு நொடி
எதிர்பாரா வேளையில்
இசைஞானி மெல்லிசை
கேட்ட ஒரு பரவசம்.


***************************************


நீயும் நானும்
நிலவும் இரவும்
தனிமையில்
கொஞ்ச நேரம்
கழித்து
துணைக்கு வந்தது
காதல்.


***************************************


மாலை நேர மழை
சிலிர்க்க வைக்கும்
தென்றல்
சூடான காபி
சூடான இஞ்சி தேநீர்
என்ன வேண்டும் என்றாய்
நீ என் அருகில் வா போதும்.


*****************************************

மடி கணினியை
கட்டிகொண்டே அழு
மடியில்
யார் வேண்டும்
என்றாய்
விட்டெறிந்துவிட்டேன்
வாங்கி கொள்ளலாம்
புது கணினி.


*******************************************

எழுதியவர் : தர்மராஜ் (5-Jun-15, 2:07 am)
Tanglish : piththanin mozhigal
பார்வை : 151

மேலே