ஞானத் தோழன் விவேகானந்தன்

விவேகானந்தன் தூய துறவி . துறவிகளில் வித்தியாசமானவன் .
ஆசானாக அல்லாமல் ஞானத் தோழனாக அறிவுபுகட்டிய காவி போர்த்திய
கற்பகத் தரு அவன். மூளையைப் பாதித்திருக்கும் நச்சினை நீக்கி
புத்துயிர் தரும் சஞ்சீவி மருந்தவன் . அறியாமை இருளை நீக்கி
ஆற்றல் மிகு சிந்தனையால் அறிவொளி பரப்பிய ஞானத் திரு விளக்கு அவன் .
அந்த அறிவொளிப் பாதையில் சற்று நடந்து பார்ப்போம்.

பள்ளி கல்லூரி நாளில் படித்தது . இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது.
அதனால்தானோ என்னவோ கவிதைகள் எண்ணங்களை என்னால் உறுதியான உள்ளத்துடன் என்னால் தர முடிகிறது. அவரின் அறிவுரை ஆற்றிய உரை அவரின் வாழ்க்கைக் குறிப்புகள் கொண்டு இந் நடைப்பயணம் தொடரும் .
விவேக ஞானத் தோழன் ஆனந்தன் சிந்தனை :
"மலைப் பாறையின் மறு புறத்தில் நீ அமர்ந்திருந்தாலும் உன் சொற்கள்
சத்தியத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பாடுமானால் அது அந்த மலைப் பாறையையும் ஊடுருவிச் செல்லும் "

இப்படி ஆற்றலுடன் நமது சொற்கள் வெளிப்படுமா ? இளைஞர்கள் முயன்று
பாருங்கள் .
ஆனந்ததத் தோழனின் அழகிய இன்னுமொரு சிந்தனையை அடுத்த
பதிவில் பார்ப்போம்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-15, 10:20 am)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே