கண்ணன் பாட்டு --- அறுசீர் விருத்தம்
பாடிப் பாடிப் பார்த்தனைப்
----- பாடல் தன்னில் வணங்குவோம் .
ஆடி யாடி அசைந்திடும்
----- ஆயர் பாடி மகிழ்ந்திடும் .
ஓடி வந்து சாந்தியும்
------ உலக மறியக் கண்ணனை
நாடி யழகாய்ப் பாடிய
---- நல்ல பாட லுலகிலே .
உலகம் முழுமை அறியவே
-----உந்தன் பாடல் கேட்குமே .
கலகம் செய்யும் கண்ணனும்
----- கண்முன் நின்றேப் பேசுவான் .
திலக மிட்டுக் கோபியர்
-----தினமும் தினமும் அழைப்பரே .
மலரும் மயங்கும் மாதவா
----- மனமும் வணங்கித் துதிக்குமே .
( மா + மா + விளம் )