கடவுளே சொன்ன மாதிரி

அப்பா
கடவுளைப் பற்றி
ஆராய்ச்சி செய்தேன்
ஆனந்தமாய் ஆனந்தி....

ஒரு பொருள்
எங்கும் உண்டு
என்பதும்
எங்கும் இல்லை
என்பதும்
ஒன்று தானே அப்பா

புரியலையே ஆனந்தி

எதன் ஒன்றின் இருப்பும்
அதன்
இல்லை என்ற எல்லை
தொடங்கும் போது தானே..

எப்படி

நமக்கு
எப்ப தெரிய வந்தது

வெளிச்சம்....
இருள்
தொடங்கிய இடத்தில்

உண்மை...
பொய்மை
தொடங்கிய இடத்தில்


நன்மை...
தீமை
தொடங்கிய இடத்தில்


வளி.....
வெற்றிடம்
தொடங்கிய இடத்தில்

கடவுள்....
எது தொடங்கிய இடத்தில்

முடிவாய் என்ன தான்
சொல்ல வருகிறாய்
கடவுள்
உண்டா இல்லையா

இல்லை என்றால்
இருக்கு என்பதன் எல்லை
சொல்ல வேண்டி வரும்...

எங்கும் நிறைந்துள்ளார் கடவுள்
என்பது
உறுதியாய் தவறு....

என்ன சரியாப்பா

ஆனந்தி கன்னம் கிள்ளி
அப்பா சொன்னார்

நீ சொன்னா - என்
கடவுளே சொன்ன மாதிரி...

எழுதியவர் : (5-Jun-15, 8:13 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 48

மேலே