விழித்துவிடு
மனிதன் மனம்
ஏமாற்றத்திற்கு ஆழ்த்தப்படும் போது
சுக்குநூறாய் ஆகிவிடுகிறது
இது சிலருக்கு கோபமாய்
பழி வாங்கும் எண்ணமாய் தற்கொலைக்கு
தூண்டப்படுவதாய் அமைந்துவிடுகிறது
மேலும் சிலருக்கு மறக்க முடியாத
காலச் சுவடாய், கல்வெட்டாய்
நெஞ்சத்தில் எழுதப்பட்டுவிடுகிறது
தினம் இதை எண்ணி எண்ணி
இருப்பது தற்கொலையினும்
கொடியதாக அமைத்துவிடுகிறது
ஏன் இந்த நிலை ?
மனித மனமே
விழித்துக்கொள்
ஏமாற்றத்தை தேடிப்போகாதே !